யாழ்.அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி திரேஸ்சம்மா ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னாரின் 31ம் நாள் நினைவு தின நிகழ்வுகள்-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் உறவினர் இல்லத்தில் 29-09-2014 திங்கட்கிழமை அன்று பகல் நடைபெற்றதுடன் அன்று மாலை அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்திலும் விஷேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அன்னாரது உறவினரால் அல்லைப்பிட்டியிலிருந்து அல்லையூர் இணையத்தில் பதிவு செய்யும்படி விடுக்கப்பட்ட-வேண்டுகோளின் பேரில் நிழற்படங்களை பதிவு செய்து -உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.