மண்டைதீவுச் சந்தியிலிருந்து மண்டைதீவு கிராமத்திற்குள் செல்லும் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது முழுமூச்சுடன் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குண்டும் குளியுமாகக் கிடந்த இவ்வீதியினாலேயே இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பயணங்களை மேற்கொண்டு வந்திருந்தனர்- மழைக்காலங்களில் இவ்வீதியினை மேவிப்பாயும் கடல்நீரினால் மண்டைதீவுக்கான போக்குவரத்துகள் பல தடவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
நீண்ட காலத்தின் பின்னர் புனரமைக்கப்படும் இவ்வீதியினால்- மண்டைதீவில் வசிக்கும் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்காலத்தில் பயனடைவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் திருவெண்காடு சித்திவிநாயகரின் தேர்த்திருவிழா அன்று பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.