அப்பு ،ஆச்சி காலந்தொட்டு அப்படியே கிடக்கிறதாம்-மண்டைதீவு அல்லைப்பிட்டி இணைப்பு வீதி-திருத்துவார்களா؟படங்கள் இணைப்பு!

அப்பு ،ஆச்சி காலந்தொட்டு அப்படியே கிடக்கிறதாம்-மண்டைதீவு அல்லைப்பிட்டி இணைப்பு வீதி-திருத்துவார்களா؟படங்கள் இணைப்பு!

1472164_1427304700832094_1315562059_n

அல்லைப்பிட்டி மண்டைதீவு மக்களை ரத்த உறவு  முறைகள் இணைந்து வைத்திருக்கின்ற போதிலும்-இக்கிராமங்கள் இரண்டினையும் இணைக்கின்ற பரவைக்கடல் ஊடான வீதி   பல தலைமுறைகளாக திருத்தப்படாமல் குண்டும் குளியுமாக பிரிந்து கிடக்கின்றது என்று இக்கிராம மக்கள் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றனர்.

பல தடவைகள் இவ்வீதியில் கிடந்த பள்ளங்கள் ஊரி போட்டு  நிரவப்பட்ட போதிலும்-அடுத்து வந்த மாரிமழையில்  ஊரி முழுவதும் நீரினால் அடித்துச் செல்லப்பட்டு மறுபடியும் குண்டும் குளியுமாக காட்சி தருகின்றதாம்.

இவ்வீதியினால் சைக்கிளில் கூட பயணிக்க முடியாத நிலையே இன்று வரை காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

சில தினங்களுக்கு முன்னர் மண்டைதீவுக்கு வருகைதந்து  பொதுவைத்தியசாலையினை திறந்து வைத்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம்  இந்த வீதியின்  புனரமைப்பு  பற்றி சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாரு வந்தாலென்ன?யாரு போனாலென்ன?

எங்கள் அப்புவும் ஆச்சியும் வாழ்ந்த காலத்திலிருந்தே இந்த வீதி இப்படித்தான் கிடக்கிறதாம்.

யாராவது கருணை காட்டுவார்களா???

மண்டைதீவு வைத்தியசாலை வீதியை புனரமைத்து தாருங்கள்;வடக்கு மாகாண சபையினரிடம் கோரிக்கை – 

அல்லைப்பிட்டி மற்றும் மண்டைதீவு மக்களிற்கு சேவையினை வழங்கி வரும் மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை வீதியினை விரைவில் புனரமைத்துத் தருமாறு யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி கேதீஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் தலைமையுரையாற்றிய சுகாதார வைத்திய அதிகாரி கேதீஸ்வரன் தனது தலைமையுரையில் குறித்த கோரிக்கையினை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1954 ஆம் ஆண்டு கட்டடப்பட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதியுட்பட அனைத்து பகுதிகளும் ஒருங்கே நிறைந்து இருந்தது. எனினும் கடந்த கால யுத்தத்தினால் சேதமடைந்திருந்தது.  இன்று 60 வருடங்களின் பின்னர் மீண்டும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எனினும் மக்களது நலனைக் கருத்திற் கொண்டு கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னரே சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் குறித்த வைத்தியசாலைக்கு வரவேண்டும் எனின் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அதில் முக்கியமானது வீதியாகும். குறித்த வீதியானது அல்லைப்பிட்டி மற்றும் மண்டைதீவு மக்களது பயன்பாட்டிற்கு உரியது. எனினும்  மோசமான நிலையில் உள்ளதால் நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குறித்த வீதியை விரைவில் புனரமைத்துத் தர வடக்கு மாகாண சபை முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

1420635_1427305010832063_1346200146_n 1420068_1427304350832129_1591200458_n 1474954_1427304547498776_302131863_n P1030058 P1030065

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux