அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் பெருநாளில் 1000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் பெருநாளில் 1000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவில் 1000 உணவுப் பொட்டலங்கள்  வழங்கிய சிறப்பு நிகழ்வு ஒன்று இம்முறை நடைபெற்றது. கடந்த வருடமும் 500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும்-எல்லோருக்கும் தாராளமாக உணவு கிடைத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு இம்முறை 1000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உணவு வழங்கிய உயர்ந்த  உள்ளம்

மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ,அமரர்கள் திரு இரத்தினசபாபதி திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஞாபகார்த்தமாக-அவர்களது  புதல்வர் திரு இரத்தினசபாபதி யோகநாதன் அவர்களின் நேரடி நிதி உதவியுடன்-அல்லையூர் இணையத்தின் ஆதரவில்-கலாநிதி பண்டிதர் செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால் ஒழுங்கமைப்பிலும் மேற்பார்வையிலும்-அன்னையின் ஆசீர்வாதத்தோடு அனைவரும் பெ்ற்றுக் கொள்ளும் வகையில் உணவுப் பொட்டலங்கள்  வழங்கப்பட்டன. 

அமரர்கள் இரத்தினசபாபதி தம்பதியினரால் காலங்காலமாக புனித அன்னையின் வருடாந்த பெருநாளில் உணவு வழங்கப்பட்டு வந்திருந்த போதிலும் அவர்களின் மறைவையடுத்து-அப்பணியினை அவர்களது உறவினர்களான திரு ,திருமதி நடேசபிள்ளை மங்கையற்கரசி அவர்கள் மேற்கொண்டு வந்திருந்தனர்.கடந்த வருடத்திலிருந்து அல்லையூர் இணையம் அப்பணியினை பொறுப்பேற்று சிறப்பாக மேற்கொண்டு வருவது  குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லையூர் இணையத்தின் ஆதரவில்- அமரர்கள் திரு இரத்தினசபாபதி திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஞாபகார்த்தமாக-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் பெருநாளில் உணவு வழங்குவதற்கு அனைத்து உதவிகளையும் புரிந்த அனைவருக்கும்-புனித அன்னையின் ஆசீர்வாதத்துடன்  எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

SAMSUNG CAMERA PICTURES

906543_1442919189281460_6349900133951637207_o SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux