இலங்கையில் பிரசித்திபெற்ற,நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்-28-06-2014 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 13 தினங்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று 11-07-2014 வெள்ளிக்கிழமை காலை நாகபூசணி அம்மன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சி இடம்பெற்றது.
நாகபூசணி அம்மனின் தேர்த்திருவிழாவினைக் காண உள்நாட்டிலிலும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நயினாதீவுக்கு வந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எமது இணையத்தின் வாசகர்களுக்காக அம்மனின் தேர்த்திருவிழாவின் வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை -கீழே இணைத்துள்ளோம்.