இது இரண்டாம் இணைப்பு!
மண்டைதீவுச் சந்தியிலிருந்து மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயர் ஆலயம் வரையான பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது முழுமூச்சுடன் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
கால்நூற்றாண்டுக்கும் மேலாக புனரமைக்கப்படாமல் குண்டும் குளியுமாகக் கிடந்த இவ்வீதியினாலேயே மண்டைதீவு மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தமது பயணங்களை இன்றும் மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இவ்வீதியினை மேவிப்பாயும் கடல்நீரினால் மண்டைதீவுக்கான போக்குவரத்துகள் பல தடவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்ததுடன் மக்கள் பயணம் செய்யமுடியாமல் பெரும் அவதியுற்றும் இருந்தனர்.
நீண்ட காலத்தின் பின்னர் புனரமைக்கப்படும் இவ்வீதியின் பணிகள் முழுமையாக நிறைவடையும் பட்சத்தில்- மண்டைதீவில் வசிக்கும் 600 குடும்பங்கள் எதிர்காலத்தில் பயனடைவர்கள் என்று நம்பப்படுகின்றது.