கால்நடைகளின் தாகம் தீர்க்கும்-மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

கால்நடைகளின் தாகம் தீர்க்கும்-மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURESthiruvenkadu sithy vinagar

தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் புண்ணியத்தில்-அப்பகுதியில் உலாவும் கால்நடைகள் தாகம் தீர்த்து வருகின்றன.

ஆலயத்திற்காக அதன் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட-தீர்த்தக்கேணியில் நிறைந்திருக்கும் தண்ணீரையே-இப்பகுதியில் உலாவரும் கால்நடைகள் குடித்து தாகம் தீர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்முன்னோர்களினால் எதிர்கால நலன்கருதி ஆலயங்களுக்கருகில் தீர்த்த கேணிகளை அமைத்து வந்திருந்தனர்.

இக்கேணிகளுக்குள் கால்நடைகளும் இறங்கி நீர் குடிக்கும் விதமாக -கேணியின் அமைப்பை மேற்கொண்டு  சிறந்து விளங்கினர்.

கடும் வறட்சியான காலங்களில் கூட கால்நடைகள்  இக்கேணிகளில் இறங்கி தாகம் தீர்த்து வந்தன.

தீவகத்தைப் பொறுத்த மட்டில் மண்டைதீவில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருவது அனைவரும் அறிந்த செய்தியாகும்.

இங்கு மனிதர்களுக்கே குடிநீர் பிரச்சினையாக இருக்கும் போது ஜந்தறிவு ஜீவன்களுக்கு யார் குடிநீர் வழங்குவது-ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீர் நிலைகள் சில காணப்பட்டாலும்-அதைவிட மண்டைதீவின் மத்தியில் அமைந்துள்ள சித்திவிநாயகரின் தடாகத்துக்குள் இறங்கி தாகம்தீர்த்து வரும் கால்நடைகளே அதிகம் என்று சொல்லப்படுகின்றது.

அப்படி தாகம் தீர்த்த பின் ஆனந்தத்தோடு துள்ளிக்குதித்தோடும் ஆடுகளின் படங்கள் சிலவற்றை உங்கள் பார்வைக்காககீழே  இணைத்துள்ளோம். 

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux