தீவகம் புளியங்கூடல் மகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த தேர்،தீர்த்தத் திருவிழாவின் வீடியோ இணைப்பு!

தீவகம் புளியங்கூடல் மகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த தேர்،தீர்த்தத் திருவிழாவின் வீடியோ இணைப்பு!

10502204_682565355125888_8702560473482794365_n

தீவகம்  புளியங்கூடல்  செருத்தனை மகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா-28-06-2014  அன்று நடைபெற்றது.  தேர்த்திருவிழாவின் சுருக்கமான வீடியோப் பதிவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

 

மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்

நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்
நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்
வம்பு பேசுவோரையும் வரமளித்துக்காத்திடுவாய்
கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்

பாமாலை சூட்டுவோர்க்கு பூமாலை சூட்டிடுவாய்
காமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்
ஆடிவருவோர்க்கு ஆறுதல் தந்திடுவாய்
தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்

வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்
நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
பாடி வருவோரின் பாரத்தை போக்கிடுவாய்
கூடிவருவோர்க்குக் குலவிலக்க்காயய்த்திகழ்ந்திடுவாய்

நஷ்டம் என்பதே எதிலும் வாராமல்
இஷ்டமுடன் இனிமையாய் வாழ்ந்திடச்செய்யுமே
போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
போற்றி போற்றி கற்பகவல்லியே போற்றி
போற்றி போற்றி அங்கயற்கண்ணியே போற்றி
போற்றி போற்றி மகாமாரியன்னையே போற்றி….!!!

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux