வேலணை பிரதேசசபையினால் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு -பிரதேசசபையின் ஊழியர்களும் பொதுமக்களும் இணைந்து-சாட்டியில் அமைந்துள்ள இந்து மயானத்தினையும் அதன் அண்டிய பகுதிகளையும் சிரமதானமூலம் துப்பரவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியானது வடலிகள் பற்றைகள் மற்றும் கழிவுப் பொருட்களால் நிறைந்து காணப்பட்டதனாலேயே இப்பகுதியினை துப்பரவு செய்ய வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்து-வேலணை பிரதேசசபை மேற்கொண்ட இச்சிரமதானப்பணியினால் தற்போது இப்பகுதி மிகவும் துப்பரவாகக் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு மயானத்திற்கு அருகில் பாவனைக்குதவாத நிலையில் அமைந்திருந்த கிணறும் துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.