அல்லைப்பிட்டியில் அனைத்து மக்களாலும் மத வேறுபாடின்றி வணக்கப்படும் புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருந்திருவிழாவினை முன்னிட்டு-ஆலயத்தினை புனரமைக்கும் பணிகளில்-ஆலயத்தின் பாதுகாவலரும்,பராமரிப்பாளருமாகிய,பெரியவர் அல்பிரட் ஜோர்ஜ் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாலயத்தின் திருவிழா அடுத்த மாத முற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில்-மிகவும் சேதமடைந்த ஆலயத்தின் முன்கூரைப் பகுதியினை அகற்றி-புதிதாக சீற் போடுவதற்கான வேலைத்திட்டத்தினையே பெரியவர் ஜோர்ஜ் அவர்கள் ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
இவ்வாலயத்தின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு அல்லையூர் இணையத்தின் ஆதரவுடன் திரு பொன்னத்துரை ஸ்ரனிலோஸ் அவர்களினால் புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்களிடம் நிதி திரட்டி கடந்த வருடத்திலிருந்து வழங்கி வருகின்றோம்.
இந்த வருடமும் அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்-உங்களின் பேராதரவினையும் அல்லைப்பிட்டி கார்மேல் அன்னைக்கு வழங்க முன்வர வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.
இம்முறை திரட்டப்படும் நிதி-ஆலயப்புனரமைப்புப் பணிகளுக்காக-பெரியவர் அல்பிரட் ஜோர்ஜ் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.