யாழ்ப்பாணத்திலிருந்து தீவகத்திற்குச் செல்லும் பிரதான வீதி தற்போது பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு வருவது நீங்கள் ஏற்கனவே அறிந்ததே- இவ்வீதியானது ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்வதுடன்-இவ் வீதியில் ஆங்காங்கே சிறியதும் பெரியதுமான பல பாலங்கள் அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்- அப்படி அமைக்கப்படும் பாலங்களுக்குள் மிகப் பெரிய பாலமொன்று மண்டைதீவு சந்தியிலிருந்து யாழ் நோக்கிச் செல்லும் பக்கமாக 500 மீற்றர் தொலைவில் அமைக்கப்படுகின்றது. இப்பாலத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக -அதற்கருகில் இன்னொரு தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டு அதனூடாகவே தீவகத்திற்கான வாகனப் போக்குவரத்துக்கள் தற்போது நடைபெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
