இது கதையல்ல நிஜம்

                                                   இவரைத்தெரியுமா?
இது கதையல்ல 
நிஜம்!!!1
*****************************************************
வாழ்க்கையை தொலைத்துவிட்டு உயிர் மட்டுமே
மிஞ்சியிருக்க உடம்பு செயலிழந்து 18வருடங்களாய்
ஜெர்மனியில் வாடும் நம் ஊர் இளைஞனின் கண்ணீர்கதை!
இரக்கமுள்ள இதயங்களே படியுங்கள்!


அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைச்சேர்ந்த திரு
சபாரட்ணம் பாலசுப்பிரமணியம்(பாலன்)அவர்கள்
24/06/1959 ஆம் ஆண்டு அல்லைப்பிட்டியில் பிறந்தார்
அல்லைப்பிட்டியில் இருந்து வெளியேறி 10/11/1984
அன்று ஜெர்மனியை சென்றடைந்தார். அன்று முதல்
தனது உறவினர்களோடு 1992 வரை தொடர்புகளை மேற்கொண்டிருந்தார்.அதன்
பின் 2010வரை அதாவது 18வருடங்கள் இவர் தனது உறவினர்களுடனான தொடர்பினை துண்டித்திருந்தார்.இந்த 18வருடங்களில் இவருக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறிய நாம் முயற்சியினை மேற்கொண்டோம். பல
சிரமங்களுக்கு மத்தியில் இவரது சகோதரர்களுடன் தொடர்பினை மேற்கொண்டோம்.
இனி இவரது இளைய சகோதரி பத்மினிதேவி கூறுவதைக்கேளுங்கள்!!!


எங்கள் சகோதரன் வெளிநாடு சென்றபின் 1992வரை எங்களோடு கடிதம் தொலைபேசி என தொடர்புகளை மேற்கொண்டிருந்தார் அதன்பின் அவருடனான தொடர்புகள்
துண்டிக்கப்பட்டு விட்டன . பின்னர் 2002ம்ஆண்டு அவரது நண்பரும் அவரோடு
ஒன்றாக வெளிநாடு சென்ற எமது ஊரைச்சேர்ந்த ஒருவர் எங்கள் வீட்டுக்கு
வந்து எமது சகோதரன் நோய்வாய்ப்பட்டு சுயநினைவிழந்து.(கோமாவில்)
வைத்தியசாலையில்இருப்பதாக கூறி அவரது ஒரு நிழல்ப்படத்தையும் தந்து விட்டு சென்றார்.. அதன்பின்
இன்றுவரை அதாவது 2010வரை எங்கள் சகோதரனைப்பற்றிய எந்தவிதமான
தகவலும் இன்றி நாங்கள் தவிக்கின்றோம்.என்று கண்ணீரோடு கூறிவிடைபெற்றார்ஆகவே இவர் இன்று உயிருடன்தான் இருக்கின்றாரா?

அல்லது இறந்து விட்டாரா?என்பதனை அறிந்து கொள்ள இவரது
நண்பரைத்தேடினோம். அவரோடு தொடர்பினை ஏற்படுத்தி பாலன் பற்றிய தகவல்களை கேட்டோம். பாலனுக்கு 1992ஆம் ஆண்டு மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதனால் அவருக்கு கட்டாய சிகிச்சை அளிக்கப்பட்டதுஎன்றும் அதனால் ஏற்பட்ட மாற்றத்தினால் அவர் சுயநினைவை இழந்து விட்டார் என்றும் தான் அவரை சென்று பார்த்ததாகவும் கூறினார். இப்போது அவர் உயிருடன் உள்ளாரா?என்ற எமது கேள்விக்கு ஊர்ஜிதப்படுத்தாத தகவல்களின் அடிப்படையில் தற்போது அவர் உயிருடன் இல்லை என்றே தாம்
கருதுவதாக தெரிவித்தார். தொடர்ந்து தாம் அவரைப்பற்றிய
தகவல்களை சேகரித்து எமக்கு தருவதாக
உறுதியளித்துவிடைபெற்றார்.இதைப் படிக்கும் உங்களுக்கு இவரைப்பற்றி மேலதிகமாக விபரங்கள் தெரிந்திருந்தால் எம்மோடு தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். ஏனெனில் இவர் உயிருடன்தான் உள்ளார் எனஎதிர்பார்த்து காத்திருக்கும் இவரை பெற்ற தாய்க்கும் இவரது சகோதரர்களுக்கும் நாம் முடிவாய் ஒரு செய்தியை தெரிவிக்கலாமே!!!!!!!!!                               காணாமல் போனவன்

            
                                          இது கதையல்ல நிஜம்!!!2
ஒரு நண்பனைப்பற்றிய கதை!!! இவன் அல்லைப்பிட்டி கிராமத்தில் 30/04/1964 ஆம் ஆண்டு புதன்கிழமை பிறந்தவன் இவனது பெயர் தேவராஜா சாந்தலிங்கம்
எல்லோரும் சாந்தன் என்று அன்பாக அழைப்பார்கள்.இவனது தோற்றம் கவர்ச்சி உடையதாகவே இருக்கும். சுருள்முடி நேர்த்தியான முத்துபோன்ற
பற்கள் அதில்புன்சிரிப்பு மெல்லிய இறுகிய உடம்பு ஸ்ரைலான நடை இதுதான்
எனதுநண்பனைப்பற்றிய எனது மனதில் பதிந்துள்ள தோற்றம் அன்பாகபழகும்
அவனுடன்எனது நட்பு ஆரம்பமானது 30 வருடங்களுக்கு மேல் அன்றிலிருந்து
இவனும் நானும் ஒன்றாகவே சுற்றினோம்.
எமது கிராமத்தில் எங்கள் இருவரின் கால்தடங்கள் படாத இடங்களே இல்லை
எனலாம் .
மிகுதி அடுத்த வாரம்


WordPress Appliance - Powered by TurnKey Linux