சுனாமி போர் அனர்த்த நிரந்தர வீட்டுத்திட்டத்தின் கீழ்-உதவி வழங்கும் நிறுவனங்களான கரித்தாஸ் மற்றும் கியூடெக் நிறுவனங்களின் நிதியுதவியுடன்-தீவகம் அல்லைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தை மையப்படுத்தி அமைக்கப்பட்ட பிரமாண்டமான புதிய குடியேற்றத்திட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியினை புனரமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குடியேற்றத்திட்டத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் யாவும் படிப்படியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு 70 குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ள போதிலும்-மேலதிகமான குடும்பங்கள் இங்கு குடியேறி வருவதுடன்-இக்குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள பல காணிகளை அதிக விலைக்கு வாங்கி வருவதாகவும் அறியமுடிகின்றது.
எதிர் காலத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட பெரிய குடியிருப்பாக-அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் விளங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.