தீவகம் உட்பட யாழ் குடாநாட்டின் பலபகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் நன்னீர் ஊற்றின் அளவு மிக வேகமாக குறைவடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலமை தொடர்ந்து இருக்குமானால் சிலமாதங்களில் யாழ் குடாவில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
தீவகத்தின் பல கிராமங்களுக்கு குடிநீரை வழங்கி வரும் மண்கும்பான் செட்டிகாடு நீர் வழங்கும் மையம் மற்றும் சாட்டியில் அமைந்துள்ள நல்ல தண்ணீர்க்கிணறு ஆகியவற்றின் நன்னீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
ஊர்காவற்றுறை தொகுதியில் அமைந்துள்ள மெலிஞ்சிமுனை கிராம மக்கள் தற்போது குடிநீர் பெறுவதற்கு பெரும் கஸ்ரப்படுவதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.