யாழ் தீவகத்தில் அனைத்துப் பயிர்களும் விளையக்கூடிய பகுதிகளில் ஒன்றாக மண்கும்பான் குறிப்பிடப்படுகின்றது.
இங்கு மரமுந்திரிகை-திராட்சை-பேரீட்சை-முருங்கை உட்பட அனைத்துப் பயிர்களும் ஏற்கனவே பரீட்சித்துப் பார்கப்பட்டு பயிடமுடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது மண்கும்பான் ஊடாகச் செல்லும் பிரதான வீதிக்கருகில் தானாக வளர்ந்த பேரீட்சை மரம் ஒன்று வருடம் தோறும் சீசனுக்கு அதிக விளைச்சலை கொடுத்து வருவதனை நிழற்படங்களாக பதிவு செய்து உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
அத்தோடு கடந்த வருடமும் எம்மால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களில் இரண்டினையும் கீழே சேர்த்து இணைத்துள்ளோம்.