முன்னொரு காலத்தில் மனிதவலுவினால் மட்டுமே செய்யப்பட்டு வந்த வீதி அமைக்கும் பணிகள் தற்போது இயந்திரங்களுக்கு மாற்றப்பட்டு -அவற்றின் துணையோடு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப் பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியதே.
வளர்ச்சியடைந்த நாடுகளில் இக்கடுமையான வீதி அமைக்கும் பணிகளை இயந்திரங்களே செய்து வருகின்ற போதிலும்-வளர்ந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் அதுவும் எமது தீவகத்தில் இயந்திரங்களின் துணை கொண்டு வீதி புனரமைக்கப்படுவது இரட்டிப்பு மகிழ்ச்சிக்குரியதே-ஏனெனில் கடுமையான இப்பணிகளை மனிதன் செய்கின்ற போது பார்ப்பவர்களுக்கே-மனது வலிக்கும்.
அராலிச் சந்தியிலிருந்து வங்களாவடி ஊடாக ஊர்காவற்றுறை செல்லும் பிரதான வீதியே தற்போது புளரமைக்கப்படுகின்றது.
யாழ் பண்ணையிலிருந்து ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் தீவகத்தின் பிரதான வீதியே -தற்போது மிகப்பிரமாண்டமான வேலைத்திட்டங்களுடன் காபட் வீதியாக மாற்றப்படுகின்றது.