உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வடமாகாண விவசாய, கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடத்திய உலக சுற்றுச் சூழல் தின விழா 05.06.2014 வியாழக்கிழமை அன்று காலை மண்டைதீவு, வழிப்பிள்ளையார் கோவில் அருகில் அமைச்சின் செயலாளர் எம்.ஹால்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மற்றும் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், வேலணைப்பிரதேசசபைத்தலைவர் சி.சிவராசா, யாழ்.பல்கலைக்கழக விவசாய பீட பேராசிரியர் கு.மிகுந்தன், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப்பணிப்பாளர் திருமதி .வி.சத்தியகுமார் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றதாகவும்-இவ்விழாவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டதாகவும்- மேலும் தெரிய வருகின்றது.