மண்டைதீவு-அல்லைப்பிட்டி மக்களின் மருத்துவ தேவையை ஒருகாலத்தில் முழுமையாக பூர்த்தி செய்து வந்த மண்டைதீவு அரசினர் வைத்தியசாலை-கடந்த காலங்களில் இடம்பெற்ற-யுத்த அனர்த்தங்களினால் முழுமையாக சேதமைடைந்ததைத் தொடர்ந்து- அதேயிடத்தில் அரசாங்கத்தினால் அனைத்து வசதிகளும் கொண்ட புதிய மருத்துவமனை ஒன்று அமைத்து முடிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் காணப்படும் இவ்வைத்தியசாலையின் திறப்பு விழாவுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந் நிலையில் இப்புதிய மருத்துவமனையின், திறப்பு விழாவுக்குக்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக நேரில் சென்ற வேலணை பிரதேச சபையின் தவிசாளர் திரு.சி.சிவராசா அவர்கள்-அங்கு வருகை தந்திருந்த டொக்ரர் திரு திருநாவுக்கரசு அவர்களுடனும்-தாதியர்களுடனும் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.
இவ்வைத்திய சாலை தனது மருத்துவ சேவையினை ஆரம்பிக்கும் பட்சத்தில்-மண்டைதீவு ,அல்லைப்பிட்டி மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று நம்பம்படுகின்ற போதிலும்-அல்லைப்பிட்டி மக்கள் இங்கு வருவதற்கான பரவைக்கடல் ஊடான வீதி படுமோசமாக சேதமைடைந்துள்ளதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.