வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட-கிராமங்களான, மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை-நயினாதீவு-புங்குடுதீவு ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கியமான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் தெரிவினை மேற்கொள்ளும் முகமாக-இக்கிராமங்களில் மக்களுடனான சந்திப்பொன்றினை வேலணை பிரதேசசபை அண்மையில் மேற் கொண்டிருந்தது.
இதில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும்அழைக்கப்பட்டு, அப் பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கியஅபிவிருத்தி திட்டங்களை தெரிவு செய்யுமாறு வேண்டப்பட்டிருந்தனர்.
இதில் பெரும்பான்மையான மக்களின் தெரிவினைப் பெற்ற முக்கிய அபிவிருத்தித்திட்டங்கள் பின்னர் வேலணை பிரதேசசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்டுகின்றது.
மண்கும்பான் சாட்டியில் நடைபெற்ற போது….
அல்லைப்பிட்டி உப அலுவலகத்தில் நடைபெற்ற போது…..
மண்டைதீவு உப அலுவலகத்தில் நடைபெற்ற போது……
நயினாதீவு உப அலுவலகத்தில் நடைபெற்ற போது….