அல்லைப்பிட்டியில் அதிகரித்து வரும் உள்ளூர் பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு-30 பொதுமக்களை உறுப்பினராகக் இணைத்துக் கொண்டு-சிவில் பாதுகாப்புக் குழு ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்-கிராமசேவையாளர் திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற-கூட்டத்திலேயே இக்குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவராக- அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் அதிபர் திரு என்.பத்மநாதன் அவர்களும்-செயலாளராக கிராம சேவையாளர் திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும்-இக்குழுவின் உறுப்பினர்களாக-30 பொதுமக்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதே போன்ற சிவில் பாதுகாப்புக் குழு ஒன்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பொதுமக்களுடன் இணைந்து உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.