அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபை பாலர் பாடசாலையின் சிறுவர்களை சந்தோசப்படுத்தும் முகமாக சுற்றுலா ஒன்றை-அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் போதகர் மதிப்புக்குரிய M.நவரட்ணராஜா அவர்களினால் ஒழுங்கு செய்து -யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
14.05.2014 புதன்கிழமை காலை 8.00 மணி தெடக்கம் மாலை 5.45 வரை யாழ்ப்பாணத்திலுள்ள சுப்பிரமணியம் பூங்கா, கச்சேரி அருகில் உள்ள பழைய பூங்கா, மற்றும், பூங்கனிச்சோலை போன்ற பல இடங்களிற்குக் அழைத்துச் சென்றார்கள்.
இரு ஆசிரியர்களுட்பட பல பெற்றார்களும் இதில் கலந்து கொண்டதோடு- மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழலைகளின் சுற்றுலாவுக்கான நிதி அனுசரணையினை-அல்லையூர் இணையம் வழங்கியிருந்தது.
அல்லையூர் இணையத்திற்கு நன்றி தெரிவிப்பு
மதிப்பிற்குரிய அன்பான சகோதரரே. மேற்படி எமது மெதடிஸ்த பாலர் பாடசாலைமீது தாங்கள் கொண்டுள்ள கரிசனைக்காகவும். உதவிக்காகவும். நாங்கள் மிகவும். கடமைப் பட்டுள்ளோம். எமது பாடசாலை சார்பாக மனமார்ந்த நண்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எமது கிராமத்தின் மீது அதன் வளர்ச்சிக்காக தாங்களால் தங்களின் இணையத்தால் ஆற்றிவரும் சகல உதவிகளுக்காகவும் கடவுளின் உதவி கூட இருப்பதற்காக பிரார்த்தனை செய்கிறோம்.