கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் 2012 – 2014 கல்வியாண்டு ஆசிரிய மாணவர்களின் வெளியீடாக மலர்ந்த கலைமலர் சஞ்சிகையின் வெளியீட்டு விழா 12.05.2014 திங்கட்கிழமை காலை கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் ச.மோகன்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசியுரையை கலாசாலை அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளையும் பதிப்பாசிரியர் உரையை விரிவுரையாளர் ச.லலீசனும், வெளியீட்டுரையை கலாநிதி த.கலாமணியும், மதிப்பீட்டுரையை பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசுவும் வழங்கினர். இதழாசிரியர்களுள் ஒருவரான செ.மோகநாதன் ஏற்புரை நல்கினார். இச்சஞ்சிகை கலாசாலை வரலாற்றில் மலர்ந்த 44 ஆவது மலர் என்பது குறிப்பிடத்தக்கது.
