யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கனகரத்தினம் அவர்கள் 08-05-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். |
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சொர்ணலிங்கம்(பிரான்ஸ்), சரஸ்வதி(கொழும்பு), இராசரத்தினம்(தில்லை சிவன் – யாழ்ப்பாணம்), சிவபாக்கியம்(கனடா), காலஞ்சென்ற சுந்தரலட்சுமி, நவரத்தினராஜா(சுரேஸ்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லீலாவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மகேந்திரநாதன், செல்வராணி(யாழ்ப்பாணம்), செல்வகுமரன்(கனடா), நந்தினி(கனடா), காலஞ்சென்ற ஜெயலட்சுமி, சந்திரா(பிரான்ஸ்), தங்கநாயகி(கொழும்பு), வேலும்மயிலும்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
உமாவதிசிவம், ராசு, சாந்தலிங்கம், லெட்சுமி ஆகியோரின் பாசமுள்ள சகலனும்,
ஜயந்தன், சிந்துரா, நிருசன்,கோகிலன்-சுஹாசினி,குபேரன்,கோமகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அமல்ராஜ், லக்சிகன், பிரவீன், கிருசிகன், சிவசெந்தில், பிரயங்கா ,கிரிசன், கிரிசிகா,கனிஸ்ரா-டிலான்,துளசிகா,அனுசிகா,சாரங்கன்,சித்திராங்கன்,நிருத்திகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சாருத்ஜா,இலியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-05-2014 சனிக்கிழமை அன்று காலை 09:00 மணியிலிருந்து பி.ப 05:00 மணிவரை 591, Galle Road, Mount Lavinia எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 11-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியிலிருந்து பி.ப 02:00 மணிவரை அதே முகவரியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு |
||||||||||||||||||||||||
|