அண்மையில் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த,அல்லைப்பிட்டி மண்கும்பான் கிராமங்களில் அமைந்துள்ள வயல்நிலங்களுக்கு விஷமிகள் சிலர் தீ வைத்துள்ளதாக – தெரிவிக்கப்படுகின்றது-
இப்பகுதி கால்நடைகள் உணவுதேடி அலைந்து கொண்டிக்க-இரக்கமற்ற இவர்கள் வயல்நிலங்களில் காய்ந்து போன புட்களுக்கு தீ மூட்டி ஆனந்தம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டியில் இரு தடவைகள் மூட்டப்பட்ட தீ வயல் பிரதேசத்தின் காய்ந்த புட்களை எரித்து நாசப்படுத்தியுள்ளதாக மேலும் அறிய முடிகின்றது. பரவலாக எரிந்த தீயினை-கடற்படையினரும்,அப்பகுதியினைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருமே அணைத்து கட்டுப்படுத்தியதாக மேலும தெரிவிக்கப்படுகின்றது.
மேலே இணைக்கப்பட்டுள்ள முதல் இரண்டு படங்களும்-மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் தீ பரவலாக எரிவதனையே காட்டுகின்றது.
மற்றைய படங்கள் அல்லைப்பிட்டி வடக்கு வயல் நிலப்பகுதியில் முழுமையாக எரிந்த நிலையில் காணப்படும் வயல் நிலங்களாகும்.