பிரான்ஸ் பரிசில் சர்வதேச தொழிலாளர் தின ஊர்வலம் 01.05.2014 வியாழன் நண்பகல் 1.00 மணிக்கு Place de La Bastilleல் என்ற இடத்தில் ஆரம்பித்து Nation என்ற இடம் வரை நடைபெற்றது.பிரான்ஸ் தொழிலாளர் சங்க அமைப்புக்களுடன்-பிரான்சில் வாழும் பல்வேறு நாட்டு மக்களின் தொழில் சார் அமைப்புக்களும் இணைந்து வருடந்தோறும் தொழிலாளர் தினத்தை சிறப்பாக நடத்தி வருகின்றன. இம்முறை கடுமையான மழை பெய்த போதிலும் ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
உழைக்கும் நேரத்தை நிர்ணயித்த தொழிலாளர் தினம்-மே-01
வேலைக்கேற்ற ஊதியமில்லை, வேலை என்கிற பெயரில் கசக்கி பிழிகிறார்கள் என்று ஓரளவு நல்ல சம்பளம் வாங்கும் இன்றைய கால கட்டத்திலேயே நாம் கண்டபடி புலம்ப வேண்டியுள்ளது.
ஆனால் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொழிலாளர்களின் நிலையை நினைத்து பார்த்தால், நாம் எவ்வளவோ மேல் என்று நினைக்கத் தோன்றும். சம்பளம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
அன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு வேலைக்கான நேர வரம்பு கூட கிடையாது. 12 மணி நேரம், 24 மணி நேரம் என்று நாள் முழுக்க எந்த கேள்வியும் கேட்க முடியாமல் மாடாக உழைத்த கதையெல்லாம் உண்டு.
இந்த அவல நிலைக்கு 1886ம் ஆண்டின் மே மாதம் 1ம் தேதிதான் மாற்றம் தந்தது. எங்களுக்கு வேலைக்கான நேர வரம்பை நிர்ணயிக்க வேண்டும். 8 மணி நேரம்தான் எங்கள் உழைப்பு என்ற அமெரிக்க வீதிகளில் இறங்கி போராடினார்கள்.
அரசின் அடக்குமுறையில் பல்வேறு தொழிலாளர்களின் உயிர்களும் பலிகொடுக்கப்பட்டது. இத்தகைய தியாகங்களின் விளைவாக இந்த நாளில் அவர்களின் கோரிக்கை வென்றது. அதன்படி இன்று 8 மணி நேரம் வேலை 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் என்று ஒரு நாளை மூன்றாக பிரித்து தொழிலாளர்கள் நிம்மதியாக வாழ வழிவகுக்கிறது.
உழைப்பாளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் மே 1 தொழிலாளர் தினமாக உலகெங்கும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினரால்
கொண்டாடப்படுகிறது.