அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, அமரர் பொன்னம்பலம் செல்லையா அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-யாழ் சுன்னாகத்தில் அமைந்துள்ள விழிப்புலவலுவிழந்த 45 மாணவர்கள் வசிக்கும் இல்லத்தில் நடைபெற்ற-பிரார்தனை நிகழ்வுடன் மாணவர்களுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்ட நிகழ்வினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
இது விளம்பரம் அல்ல
அல்லையூர் இணையம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்களை நிறைவு செய்யும் இவ்வேளையில்-45 க்கும் மேற்பட்ட இப்படியான நிகழ்வுகளை நாம் உங்கள் பேராதரவுடன் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளோம்.
இத்தனை தடைவைகள் நாம் இப்படியான நிகழ்வுகளை நடத்துவதற்கு-நாம் பதிவு செய்த நிழற்படங்களே காரணமாக அமைந்திருந்தன என்பதனாலேயே நாம் தொடர்ந்தும் நிழற்படங்களை பதிவு செய்து வருகின்றோம்.
புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் ஓடிக்கொண்டே இருப்பதனால்-அவர்களுக்கு நின்று நிதானித்து இப்படியான நிகழ்வுகளை செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை-
எனவேதான் எம்மால் முடிந்த வரைக்கும் தொடர்ந்து இப்பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று உறுதிபூண்டுள்ளோம்.மக்களைச் சென்றடைவதற்காக மட்டுமே இப்படங்களை பதிவு செய்கின்றோம்.
சிலவேளைகளில் நாளை நீங்களும் எங்களை அழைக்கலாம் அல்லவா!