யாழ் தீவகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால்-குடிநீர் உணவின்றி கால்நடைகள் செத்து மடிகின்ற அபாயமான நிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மழையின்றி புழுதிபறக்கும் வீதிகளில் அலைந்து திரியும் கால்நடைகள்-நீர் உணவு இன்றி ஆங்காங்கே செத்து மடிவதாக மேலும் தெரிய வருகின்றது.
சில தினங்களுக்கு முன்னர் தீவக வீதிகளில் செத்துக்கிடந்த மாடுகளை -வேலணை பிரதேசசபையின் ஊழியர்களினால் அப்புறப்படுத்தப்பட்டு புதைக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.தொடர்ந்து இந்நிலமை நீடித்தால் தீவகம் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று அச்சம் வெளியிடப்படுகின்றது.
அதேநேரம் நயினாதீவில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய- சுவிஸ் அபிவிருத்திச் சங்கம் நயினாதீவு முன்வந்து-வேலணை பிரதேசசபையின் ஊடாக நயினாதீவுக்கான குடிநீர் விநியோகத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.