உலகம் முழுவதும் புதிது புதிதாக பலபேர் சாதனைகளை செய்து கின்னஸ் புத்தகத்திலும்-மக்கள் மத்தியிலும் புகழ்பெற வேண்டி முயன்று வருவது நீங்கள் அறிந்தது தான்-அந்த வகையில் நம் தீவகம் வேலணையிலும் ஒருவர் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கோடு முன்வந்துள்ளார்.
வேலணை 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு கந்தையா செல்வம் அவர்களே மேற்குறிப்பிட்ட சாதனை வீரர் ஆவார்.அண்மையில் வீடொன்றினுள் புகுந்த கொடிய பாம்பினை உயிருடன் பிடித்து மாலையாக கழுத்தில் போட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் அடுத்து பாத்திரத்தில் சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மயிர்க் கொட்டிகளை (மசுக்குட்டிகள்) தனது வெற்றுடம்பில் கொட்டி படரவிட்டு சாதனை படைத்துள்ளதுடன் சில தினங்களுக்கு முன்னர் 500 குண்டூசிகளை தனது வெற்றுடம்பில் குத்தி புதிய சாதனை படைத்துள்ளார். அடுத்து இவர் பண்ணப்போகும் சாதனை தீவகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று நம்புவோமாக!