மண்டைதீவில் ஒரு விநாயகர் ஆலயம்-அதுதான் திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயம்
மண்கும்பானில் ஒரு விநாயகர் ஆலயம்-அதுதான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம்
இவை இரண்டுக்கும் நடுவில் அல்லைப்பிட்டியில் ஒரு காலத்தில் தேர் ஓடிய ஆலயமாகவும்-எம்முன்னோர்களினால் பக்தி்யோடு பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட ஆலயமாக சிறப்புடன் விளங்கிய ஆலயம் தான் சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயம் ஆகும்.
இந்த ஆலயத்திற்கு அருகில் குடுப்பத்துடன் நீண்டகாலமாக வசித்து வந்ததுடன் – அல்லைப்பிட்டியில் அமைந்திருந்த ஏனைய சைவ ஆலயங்களின் பூசகராகவும் பணிபுரிந்தவர் தான் அமரர் நடேஸ்வரர் குருக்கள் ஆவார்.
அல்லைப்பிட்டியில் பெரும் சிறப்போடும் புகழோடும் ஒரு காலத்தில் விளங்கிய -சிந்தாமணிப்பிள்ளையாரின் இன்றைய நிலையோ கண் கலங்க வைக்கின்றது.
ஆலயத்திற்குள் இருந்த விக்கிரகங்கள்-அனைத்தும் களவாடப்பட்ட நிலையில்- வெறுமையாகக் காணப்படும் ஆலயம் கால்நடைகளின் கூடாரமாகவும்-சமூக விரோதிகளின் மறைவிடமாகவும் மாறியிருப்பதாக -இவ்வாலயத்தோடு தொடர்பு பட்ட ஒருவர் கவலையோடு எமது இணையத்திற்கு தெரிவித்தார்.
அன்பான புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களே!
எம்முன்னோர்களினால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட-அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாரின் இன்றைய நிலையினை சுருக்கமாக மேலே பதிவு செய்துள்ளோம்.மீண்டும் இந்த ஆலயத்தினுள் விநாயகர் விக்கிரகம் வைத்து கும்பாபிஷேகம் செய்து ஒரு கால பூஜையாவது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
மிகமிகப் பழமையான சிந்தாமணிப் பிள்ளையாரை-அழியவிடாமல் காப்பாற்ற வேண்டிய முழுப்பொறுப்பும்-புலம் பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி மக்களையே சார்ந்துள்ளது .
அனைத்து தொடர்புகளுக்கும்
தொலைபேசி இலக்கம்-0033651071652