தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழா-04-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து எட்டுத்தினங்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று-14-04-2014 திங்கட்கிழமை அன்று விநாயகப் பெருமான் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வீதியுலா வந்த கண் கொள்ளாக்காட்சியினைத் தொடர்ந்து-15-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று விநாயகப் பெருமான் பக்தர்கள் புடைசூழ தீர்தம் ஆடிய கண்கொள்ளாக்காட்சியும் இடம் பெற்றது.
தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வீரகத்தி விநாயகனின் புகழ் உலகமெல்லாம் பரவிட வேண்டி -அல்லையூர் இணையத்தினால் –
கொடியேற்றத்திருவிழா
தேர்த்திருவிழா
தீர்த்தத்திருவிழா –ஆகிய முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் வீடியோப்பதிவு செய்யப்பட்டு -வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகனின் புகழ் உலகமெல்லாம் பரவிட வேண்டும் என்பதோடு-புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் மக்கள் இத்திருவிழாக்களைப் பார்வையிட்டு ஆனந்தமடைய வேண்டும் என்ற நோக்கோடு தான் இப்பணிகளை நாம் முன்னெடுத்திருந்தோம்.
எம்மால் வெளியிடப்பட்ட-இத்திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள்- பல சகோதர இணையங்களில் மீள்பதிவாகி -மண்கும்பான் ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் புகழை உலகமெல்லாம் பரவச் செய்து கொண்டிருக்கின்றன என்பதனையும் அறியத்தருகின்றோம்.
15-04-2014 செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தியானின் தீர்த்தத்திருவிழாவின் வீடியோப்பதிவிற்கான அனுசரணையினை வழங்கியவர்
திரு நல்லைநாதசிவம் கேதீஸ்வரன்-மண்கும்பான்–லண்டன்