தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேரேறி வீதியுலா வந்த காட்சியின் முழுமையான வீடியோப்பதிவு!

10258000_10202573323546926_435706397493076118_o

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழா-04-04-2014  ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து எட்டுத்தினங்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று-14-04-2014 திங்கட்கிழமை அன்று  விநாயகப் பெருமான் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வீதியுலா வந்த கண் கொள்ளாக்காட்சி இடம் பெற்றது.

தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வீரகத்தி விநாயகனின் புகழ் உலகமெல்லாம் பரவிட வேண்டி -அல்லையூர் இணையத்தினால் -இத்தேர்த்திருவிழாவின் காட்சிகளை முழுமையாக அதேநேரம் சுருக்கமாக தெளிவாக வீடியோப்பதிவு செய்து  உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம்.

வெள்ளைப்புற்றடி வீரகத்தியானின் கொடியேற்றம் மற்றும் தேர்த்திருவிழாவோடு  செவ்வாய்கிழமை அன்று  நடைபெறும் தீர்த்த திருவிழாவினையும் உங்கள் பார்வைக்கு எடுத்து வரவுள்ளோம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீவீரகத்தி விநாயகன் தேரேறி வரும் காட்சிதனை-உலகம்முழுவதும் பரந்து வாழும் மண்கும்பான் மற்றும் தீவக மக்கள் பார்த்து மகிழ்ந்து அருள் பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு-வீடியோப்பதிவிற்கான அனுசரனையினை கடந்த வருடத்திலிருந்து  தொடர்ந்து வழங்கி வருபவர்

திரு ஏரம்பு வேலும் மயிலும்-மண்கும்பான்-பிரான்ஸ்

பகுதி-01

பகுதி-02  

என இரண்டு பிரிவுகளாக  வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

Leave a Reply