பொதுவாக சீக், என்பது ஓரிறைக் கொள்கையை உடைய சமயமாக பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த குரு நானக் அவர்களால் 15ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டசமயமாகும். இச்சமயம் குரு நானக்கிற்குப் பிறகு தோன்றிய பத்து சீக்கிய குருக்களாலும் முன்னேற்றப்பட்டது. இது சுமார் 30 மில்லியன் சீக்கியர்களைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக உள்ளது.
பரிசின் புறநகர் பகுதியான bobigny இல் பலகோடி ரூபாவில்அண்மையில் அமைக்கப்பட்டுள்ள சீக்கிய மக்கள் வழிபடும் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா-13-04-2014 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.பரிசிலும் புறநகர் பகுதிகளிலும் இருந்து பெருமளவான சீக்கிய மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டதுடன் சுற்றுப்பவனியும் இடம் பெற்றது.
அல்லையூர் இணையத்தின் படப்பிடிப்பாளர் திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.