இதுவரை மண்டைதீவில் 950 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாம்.

கடந்த யுத்த காலப் பகுதியின் போது மண்டைதீவில் மக்கள் குடியிருப்புக்களுக்குச் சமீபமாக புதைக்கப்பட்டிருந்த சுமார் 950 வரையிலான மிதிவெடிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக டெனிஷ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இப் பகுதிகளில் மேற்படி பிரிவினர் கடந்த சில மாதங்களாகக் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டைதீவுப் பகுதியில் கத்தோலிக்க ஆலயத்தைச் சூழவுள்ள பகுதியிலேயே மக்கள் குடியிருப்புகளுக்குச் சமீபமாக மிதிவெடிகள புதைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் இக் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக டெனிஷ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். நாட்டில் நிலவிய யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் மண்டைதீவுப் பகுதியில் மக்கள் மீள்குடியமர்ந்து வருகின்றனர்.
இந் நிலையிலேயே மக்களின் சுமுகமான வாழ்க்கைக்கு வழியமைக்கும் நோக்கிலேயே டெனிஷ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரது நடவடிக்கைகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply