மாலா சந்திரன் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்(MEP)
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் பழைய மாணவி-அமரர் திருமதி மாலா சந்திரன் அவர்களின் நினைவாக-அவரது மைத்துனர் திரு பிரான்சிஸ் அமலதாஸ் அவர்களினால் உருவாக்கப்பட்டு –புலம் பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய பழைய மாணவர்கள் சிலரின் நிதி அனுசரணையுடன்- அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாலய மாணவர்களுக்கு வருடந்தோறும் வழங்கப்படும் ஊக்கத் தொகையின் இவ்வாண்டுக்கான கொடுப்பனவுகள் கடந்தசெவ்வாய்க்கிழமை 08/04/2014 அன்று பாடசாலையின் அதிபர் திரு பத்மநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.