வேலணை பிரதேசசபையின் குடிநீர் வழங்கும் பிரிவினால்-தீவகத்தின் பல கிராமங்களுக்கு குடிதண்ணீர் தினமும் வழங்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.கடும் வறட்சி காரணமாக-தீவகத்தின் பல கிராமங்களில் குடிதண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்-அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கோடு வேலணை பிரதேசசபையினால் குடிதண்ணீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் அறியமுடிகின்றது.
தீவுப்பகுதியில் நல்ல தண்ணீர் கிடைக்கின்ற கிராமங்களாக-அல்லைப்பிட்டியும் மண்கும்பானும் அமைந்துள்ள நிலையில்-மண்கும்பான் சாட்டியிலிருந்தும்-மண்கும்பான் செட்டிகாட்டில் அமைந்துள்ள நீர் வழங்கும் மையத்திலிருந்தும் பெறப்படும் நல்ல தண்ணீரே தீவகத்தின் ஏனைய கிராமங்களுக்கு தற்போது விநியோகிக்கப்படுகின்றது.மண்டைதீவுக்கு குளாய் மூலம் வழங்கப்பட்டு வரும் குடிதண்ணீர் மக்களுக்கு போதுமானதாக இல்லாததால் -பவுசர் மூலமும் மேலும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.