அல்லைப்பிட்டி கறண்டப்பாய் சிறிமுருகனுக்கு-வசந்தமண்டபம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.கடந்த வருடம் நடைபெற்ற-ஆலய அலங்காரத்திருவிழாவின் இறுதித்திருவிழாவின் போது வசந்தமண்டபத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது-நீங்கள் அறிந்ததே-தற்போது மெதுவாக நடைபெற்று வரும் இப்பணிகளுக்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் பக்தர்கள் உதவி வருவதாகவும்-மேலும் வசந்தமண்டபத்தினை-முழுமையாக அமைக்க நிதி தேவைப்படுவதாகவும்-ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவர் எமதுஇணையத்திற்குத் தெரிவித்தார்.