அல்லைப்பிட்டி வடக்கு பிரதான வீதியிலிருந்து-பழைய அலுமினியம் தொழிற்சாலைக்கு கிழக்குப் பக்கமாக ஊர்மனைக்குள் ஊர்ந்து செல்லும் வீதியின் தொடக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த மதகு நீண்ட காலமாக முழுமையாக உடைந்த நிலையில் காணப்படுவதினால் இப்பாதை ஊடாக வாகனங்கள் பயணம் செய்வது முடியாத காரியமாக உள்ளது நீங்கள் அறிந்ததே!
அத்தோடு நீண்டகாலமாக புனரமைக்கப்படாத காரணத்தால் இதனூடாகச் செல்லும் வீதியும் மிக மோசமாக பழுதடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும் . எனவே அல்லையூர் இணையத்தின் ஆதரவுடன்-புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களை ஒன்றுசேர்ந்து இந்த வீதியையும்-இடையில் உடைந்து கிடக்கும் மதகையும் திருத்தி இப்பகுதி மக்களின் சீரானபோக்குவரத்துக்கு வளியமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு-ஜெர்மனியில் வசிக்கும் திரு தில்லையம்பலம் கண்ணன் ( தனுஜா)அவர்கள் முன் வந்திருந்தார்கள்.