அல்லையூா் இணையத்தின் இயக்குனர்-செல்லையா சிவா அவர்களின் புதல்வி செல்வி எழில் அவர்கள் தனது பிறந்த நாளை (26-03-2014 )புதன்கிழமை அன்று-அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள-மெதடிஸ்த திருச்சபையினால் நடத்தப்படும் -மழலைகள் பாடசாலைக் குழந்தைகளுடன் மிகச் சிறப்பாக கொண்டாடினார்.அவரினால் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்ட நிதியிலிருந்து -மழலைகள் கற்பதற்கு தேவையான கற்றல் உபகரணங்களுடன்-குடிநீர் வடிகட்டுவதற்கான பில்ரர் ஒன்றும் அன்புளிப்புச் செய்யப்பட்டது.
இந்நிகழ்வினை ஒழுங்கமைத்த-அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் புதிய போதகராக-ஜனவரி மாதம் முதல் ஆன்மீகப்பணியாற்றி வரும் போதகர் வ. நவரட்ணராஜா அவர்களுக்கும்-அதற்குத் தேவையான உதவிகளை புரிந்த திரு வி.குருபவராஜா அவர்களுக்கும்-எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!