அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-மெதடிஸ்த திருச்சபையின் புதிய போதகராக பொறுப்பேற்றுள்ள மதிப்புக்குரிய வ.நவரட்ணராஜா அவர்களின் மேற்பார்வையில்-சிங்கப்பூர் மெதடிஸ்த திருச்சபையின் தமிழ்பிரிவால் திங்கள்கிழமை 17-03-2014-அன்றும் 18-03-2014 செவ்வாய்கிழமை அன்றும் இரண்டு தினங்களாக அல்லைப்பிட்டி மாணவர்களின் நலன் கருதி ஆங்கிலக்கல்வி வகுப்புக்களை இலவசமாகவும் பரீட்சார்த்தமாகவும கற்பிக்கப்பட்டது.
இரண்டு தினங்கள் நடைபெற்ற வகுப்புக்களிலும் அதிகளவான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியதாகவும் அறியமுடிகின்றது.