அகலப்படுத்தி காபட் வீதியாக மாற்றப்படும்-தீவக பிரதான நெடுஞ்சாலைக்குத் தேவையான கற்கள்-மணல் போன்ற பொருட்கள்-அனைத்தும் அல்லைப்பிட்டி துண்டிப்பகுதியிலேயே சேகரித்து வைக்கப்படுவதாக அறிய முடிகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து பண்ணை ஊடாக ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் தீவகத்தின் பிரதான வீதியினை அகலப்படுத்தப்படும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
21 மாதகால ஒப்பந்த அடிப்படையில் பெருமளவான தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.பழைய மதகுகள் அனைத்தும் மாற்றி புதிதாக அமைக்கப்பட்டு- வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டி 3ம் கட்டையில் இணைக்கப்பட்டிருந்த சிறிய மதகு முழுமையாக இடிக்கப்பட்டு மாற்றீடாக சிறிய பாலம் அமைப்பதனை கீழே இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்களில் நீங்கள் காணலாம்.
இன்னும் சில மாதங்களின் பின்னர்-யாழ் பண்ணையிலிருந்து அல்லைப்பிட்டிச் சந்தியைச் சென்றடைய-எட்டு நிமிடங்கள் வரை போதுமானதாகவிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும்-ஆண்டவனைச் சென்றடையாமல் இருக்க-போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமும் வேண்டுதலும் ஆகும்.