அல்லைப்பிட்டிக்கு பெருமை சேர்த்து வரும்-செல்வன் விமலராஜா வினோஜனின் புதிய பாடல் இணைக்கப்பட்டுள்ளது!"/>
தனது அருமைப் பேரனின் புதிய பாடல் காட்சியினைப் பார்த்து ரசிக்கும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،பெரியவர் வியாகரத்தினம் அவர்கள்-படம் விபரங்கள் பாடல் இணைப்பு!

தனது அருமைப் பேரனின் புதிய பாடல் காட்சியினைப் பார்த்து ரசிக்கும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،பெரியவர் வியாகரத்தினம் அவர்கள்-படம் விபரங்கள் பாடல் இணைப்பு!

மண்டைதீவு-அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராகத் திகளும் பெரியவர் வியாகரத்தினம் ஜயா அவர்கள்-கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியாகி இதுவரை ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டு-பாராட்டுப் பெற்று வரும்-பெரியவரின் அன்புப்பேரன் விமலராஜா வினோஜன் நடித்த பாடல் காட்சியினை ஆவலுடன் பார்த்து ரசிப்பதை கீழே இணைக்கப்பட்டுள்ள நிழற்படத்தில் காணலாம்.
10003171_709402205776613_1169362122_n

அல்லைப்பிட்டிக்கு பெருமை சேர்த்து வரும்-செல்வன் விமலராஜா வினோஜனின் புதிய பாடல் இணைக்கப்பட்டுள்ளது!

புலம்பெயர் மண்ணில் வாழ்ந்து வளர்ந்து வரும் அடுத்ததலைமுறையினரின் முயற்சிகள் தற்போது வெற்றியடைந்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகவே தமிழ் ஆர்வலர்களால் பேசப்படுகின்றது.

அந்த வகையில் எங்கள் அல்லைப்பிட்டிக் கிராமத்தைச் சேர்ந்த-திரு திருமதி விமலராஜா-புஸ்பம் தம்பதிகளின் புதல்வனும்-பெரியவர் திரு வியாகரத்தினம்ஜயாவின் பேரனுமாகிய-வினோஜனின் கலைமுயற்சிகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து-இப்போது வெளியாகியுள்ள இந்தப்பாடலுடன் அவர் முழுமையான வெற்றியடைந்துள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.

எம் கிராமத்திற்கு பெருமை சேர்த்து வரும் செல்வன் விமலராஜா வினோஜன் மேலும் மேலும் வெற்றிகள் பெற்று புகழுடன் வலம்வர ஆண்டவன் துணைபுரிய வேண்டி-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

1489179_706795149370652_1883958444_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux