யாழ்ப்பாணத்திலிருந்து தீவகம் செல்லும் பிரதான வீதியில்-அல்லைப்பிட்டிச் சந்தியிக்கு அருகில் வீதிக்கு வடக்குப்பக்கமாக-அதேநேரம் ஆலயத்தின் வாசல் கிழக்கு நோக்கிப் பார்த்த படி சிறிய வைரவர் ஆலயம் ஒன்று பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது.அல்லைப்பிட்டிச் சந்தியில் அமைந்துள்ள இராணுவக் காவலரணுக்குப் பக்கத்திலேயே இந்த ஆலயம் காணப்படுகின்றது.இந்த ஆலயத்திற்குள் இருந்து கம்பீரமாக வளந்து நிற்கும் வேப்பமரம் ஒன்றினையும் படத்தில் காணக்கூடியதாகவுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இவ்வாலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள விரும்பினால் இராணுவத்தினர் அனுமதி தருவார்கள் என்றே நம்பப்படுகின்றது.
இருந்தாலும்-ஒரு பொன்னையாண்ணனோ அல்லது வரப்பிரகாசம் பெரியவரோ அல்லது அமரர் சிவக்கொழுந்து ஆச்சியோ அருகில் இல்லையே உயிருடனும் இல்லையே அப்படியானால் யார் இந்த ஆலயத்தைப் பராமரிக்க முன்வருவார்கள்???