அல்லைப்பிட்டியில் காணாமல் போன-வணபிதா நிகால்ட் ஜிம்பிறவுண் அடிகளாரின் தாயார் காலமானார்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் காணாமல் போன-வணபிதா நிகால்ட் ஜிம்பிறவுண் அடிகளாரின் தாயார் காலமானார்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

gim12006ஆம் ஆண்டு  யுத்த அனர்த்தங்களுக்கிடையில் அல்லைப்பிட்டியில்  பங்குத்தந்தையாக ஆன்மிகப்பணியாற்றி காணாமல் போன  அருட்தந்தை நிகால்ட் ஜிம்பிறவுண் அடிகளாரின்  தாயார் திருமதி திருச்செல்வம் றோசலீன் அவர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்றைய தினம் காலமானார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 9ஆம் வட்டாரத்தில்  செவ்வாய்கிழமை அன்று  நடைபெற்றது.

இறுதி நல்லடக்க திருப்பலிப்பூசையில் யாழ்.மறைமாவட்ட பேராயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையிலான குருமார்கள் பங்கு கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். 

அருட்தந்தையின் தாயார் திருமதி திருச்செல்வம் றோசலீனை புலம்பெயர்ந்து வாழும் அவருடைய பிள்ளைகள் தாம் வசிக்கும்  நாட்டிற்கு வருமாறு அழைத்திருந்த போதிலும் காணாமல் போன  தனது மகன் திரும்பி வருவார் என்றும் அவர் வீடு வரும் போது வீட்டினில் எவரேனும் இல்லையென்றால் அவர் கவலை கொள்ளுவாரேயெனவும் மரணத்திற்கு முன்னதான சில நொடிகளில் அவர் பகிர்ந்து கொண்டார் என்று அவரது  உறவினர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியான மனஅழுத்தங்காரணமாகவே  நரம்பில் வெடிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மேலும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் –

அல்லைப்பிட்டி புனிதபிலிப்பு நேரியார் வளாகத்தில்-பங்குத்தந்தை ஜிம்பிறவுண் அடிகளாரின் பெயரில் கலை அரங்கு அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

gim2

gim1

Leave a Reply