அல்லைப்பிட்டியில் ஒரு காலத்தில் தலைசிறந்த விவசாயிகளாக வலம்வந்த நம்மவர்கள் பலபேர் புலம்பெயர்ந்து -தாம் வாழ்கின்ற பல நாடுகளில் தமது வீட்டுத் தோட்டங்களில் விவசாயத்தை மேற்கொண்டு அக மகிழ்ந்து வருகின்றார்கள் என்பதனை கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களில் நீங்கள் காணலாம்.
கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களில் தோன்றுபவர்கள்-
01-அல்லைப்பிட்டி கிழக்குப்பகுதியில் வாழ்ந்து மறைந்த-அனுபவவிவசாயியான-அமரர் அண்ணாவியார் முத்து தில்லைநாதன் அவர்களுடைய மூத்த புதல்வர் திரு தில்லைநாதன் பத்மநாதன் அவர்கள்-இவரும் தந்தையின் வழியில் தலைசிறந்த விவசாயியாக இன்றும் அல்லைப்பிட்டியில் வாழ்ந்து வருபவர்.
02-அல்லைப்பிட்டியில் வசித்து வரும் மூத்த விவசாயியான திரு இரசலிங்கம் (செட்டி) அவர்களின் வழிகாட்டலில் அவரது பிள்ளைகளால் மேற்கொள்ளப்படும் விவசாயத்தின் இன்றைய காட்சியே அடுத்து இணைக்கப்பட்டுள்ள படங்களாகும்.
03-டென்மார்கில் வசிக்கும்-அமரர் முத்து தில்லைநாதன் அவர்களின் மூன்றாவது புதல்வர் திரு பரஞ்சோதிநாதன் அவர்களினால் தமது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தினை கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.
04-கனடா வன்கூவரில் வசிக்கும்-திரு அருளானந்தம் அவர்கள்-ஒரு காலத்தில் அல்லைப்பிட்டியில் சிறந்த விவசாயியாக வலம் வந்தவர்-இன்றும் கனடாவில் சுறுசுறுப்புடன் தமது வீட்டுத் தோட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடுவதை கீழே உள்ள படங்களில் காணலாம்.
05-நியூசிலாந்தில் தமது வீட்டுத் தோட்டத்தில் குரங்குவால் பயப்பங்காய் முதல் கீரை வரை பயிரிட்டு நண்பர்களுக்கும் கொடுத்து தானும் உண்டு வாழ்ந்து வருகின்றார்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த.சின்னத்தம்பி கதீஸ்வரன் அவர்கள்-அவரின் பயத்தங்கொடிப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
இறுதியாக-அல்லைப்பிட்டியில் விவசாயம் செய்வது மிக அரிதாகி விட்டாலும்-புலம்பெயர்ந்து வாழும் எம்கிராம விவசாயிகளால் முழுமையாக விவசாயத்தை மறக்க முடியாது என்பதற்கான சிறு எடுத்துக்காட்டே இப்பதிவாகும்.