நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் கிடக்கும் மண்டைதீவிற்குள் செல்லும் பிரதான வீதி-தற்போது அகலப்படுத்தப்பட்டு கார்பெட் வீதியாக மாற்றப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வீதி அதிகார சபையின் அதிகாரிகள் மண்டைதீவிற்கு வருகை தந்து இவ்வீதியினை புனரமைப்பதற்கான வேலைத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் ஆதாரங்களுடன் அறிவித்துள்ளார்.எனவே மிக விரைவில் மண்டைதீவிற்குச் செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்பட்டு விடும் என்று நம்புவோமாக.
