மேலே இணைக்கப்பட்டுள்ள நிழற்படம்-மண்டைதீவுச் சந்தியில் அமைந்துள்ள மும்மதக்கடவுள்களின் இருப்பிடம்
வேலணை பிரதேசசபையினால் புதிதாக மண்டைதீவுச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடத்தின் நிழற்படமே மேலே இணைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வேலணை பிரதேசசபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா அவர்கள்-வேலணை பிரதேச செயலருடன் இணைந்து மண்டைதீவுக்குச் சென்று அங்குள்ள பகுதிகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.மக்களின் தேவைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.மண்டைதீவு கிழக்கு கடற்கரைப்பகுதி கடலரிப்பினால் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அத்தோடு இந்திய வீட்டுத்திட்டத்தில் மேலும் வீடுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.