காலத்தின் தேவைகருதி-விளையாட்டுமைதானம் ஆகின்றது-அல்லைப்பிட்டி விவசாய நிலங்கள்-படங்கள் தகவல்கள் இணைப்பு!

காலத்தின் தேவைகருதி-விளையாட்டுமைதானம் ஆகின்றது-அல்லைப்பிட்டி விவசாய நிலங்கள்-படங்கள் தகவல்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURESஅல்லைப்பிட்டியில் ஒரு காலத்தில் அதிக உச்ச விளைச்சலை இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கிய-விவசாய நிலங்களை-காலத்தின் தேவை கருதி அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான-விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதற்காக-நிர்ணய விலை அடிப்படையில் விற்பதற்கு இப்பகுதி விவசாயிகள் முன் வந்திருப்பதாக எமது இணையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கு அருகினில் அமைந்துள்ள-விவசாயநிலங்களே -விளையாட்டு மைதானமாக மாற்றப்படவுள்ளதாகவும்-இதனை பாடசாலைக்கு விலைகொடுத்து வாங்கிக் கொடுப்பதற்கு-இப்பாடசாலையின் புலம்பெயர் நாடுகளில்  வாழும் பழைய மாணவர்கள் -மற்றும் இப்பாடசாலையின் மீது அக்கறையுள்ளவர்களும் இணைந்து உதவிட முன் வருமாறு பாடசாலை அதிபரினால் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

காலத்தின் தேவை கருதி மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான்-ஆனால் ஒரு காலத்தில் விவசாயம் செய்வதற்கு இடம் தேடி அலைந்தனர்  இப்பகுதி விவசாயிகள் ஆனால் இன்று……மனம் அந்த பசுமையான கடந்த காலங்களை நினைத்து ஏங்கி  நிற்கின்றது.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAM_5365 1939521_1411081349142765_1233985870_n

SAMSUNG CAMERA PICTURES

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux