தீவகம் மண்டைதீவுச்சந்திக்கு எதிரே-மேற்குப்பக்கமாக-800 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள குருசடித்தீவில் புதிதாக -மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வந்த அந்தோனியார் ஆலயத்தின் திறப்பு விழா -22-02-2014 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாண மாவட்ட ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையின் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன்-மக்களின் வழிபாட்டுக்காக இவ்வாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலய திறப்பு விழாவிற்காக வருகைதந்த பெருமளவான பக்தர்களை-மண்டைதீவுச் சந்தியிலிருந்து குருசடித்தீவு வரை-இலவச சேவையாக கடல் தொழிலாளர்கள் தமது படகுகளின் மூலம் ஏற்றி இறக்கியதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-குருசடித்தீவு ஆலய திறப்பு விழாவின் நிழற்படங்களை மீள்பதிவு செய்பவர்கள்-எமது இணையத்தின் பெயருடன் பதிவு செய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.