வடமாகாணத்தில்
வடக்கு மாகாணத்தில் இந்த வருடம் மழை இல்லாத காரணத்தால் விவசாயிகள் 58 வீதமான நெல் அழிவைச் சந்தித்துள்ளனர் என்று வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர்.சி.சிவகுமார் தெரிவித்தார்.
தீவகத்தில்
இம்முறை தீவகத்தில் நெற்செய்கை என்றுமில்லாதவாறு வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும்-அனலைதீவில் மட்டும் நெல் அறுவடையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டிருப்பதனை அங்கிருந்து வரும் நிழற்படங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இதே நேரம் மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை ஆகிய பகுதிகளில் இம்முறை விரல்விட்டு எண்ணக்கூடிய விவசாயிகளே நெல் பயிரிடும் முயற்சியில் இறங்கி இருந்தனர்-அதுவும் பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் அழிந்து போக-கால்நடைகளை-மேய்ச்சலுக்காக விடவேண்டிய பரிதாப நிலை அல்லைப்பிட்டி விவசாயிகளுக்கு ஏற்பட்டதாகவும் அறியமுடிந்தது.ஆனால் இவ்வளவு கஸ்ரங்களுக்கு மத்தியிலும்-அனலைதீவு விவசாயிகள் நெல் பயிரிட்டு அதனை பாதுகாத்து மகிழ்ச்சியோடு அறுவடை செய்வது ஆச்சரியமாகவே இருப்பதாக-எமது இணையத்திற்கு அனுபவம் மிக்க அல்லைப்பிட்டி விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி-அனலை ஊர்க்கோலங்கள்