தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்- திருப்பதி கோவிலில் தண்ணீர் பாட்டில்களுக்குத் தடை

தீவிரவாதிகள் திரவ வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால், திருப்பதி கோவிலில் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய கோவில்களில் தீவிரவாதிகள் திரவ வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு கருதி திருப்பதி கோவிலுக்குள் பக்தர்கள் குடிநீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மகா நுழைவுவாயில் வரை பாட்டில்களை எடுத்துச் செல்லலாம். அதற்குப் பிறகு தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லக் கூடாது.

Leave a Reply